வளமான தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்: பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் வாழ்த்து

2021-05-04@ 01:48:53

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் பெருவாரியான ஆதரவுடன், முழுபலத்துடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து வளமான தமிழகத்தை உருவாக்கிட வாழ்த்துகிறோம்.மேலும், தற்போது மிகவும் நலிவடைந்து போயுள்ள பால்வளத்துறைக்கு தனிக்கவனம் செலுத்தி புத்துயிர் அளிக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து மீட்டு சீர்செய்திட வேண்டும்.