SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நன்னிலம் அருகே மின் கம்பியில் சிக்கி மயில் காயம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

2021-05-04@ 12:55:12

திருவாரூர்: நன்னிலம் அருகே மின் கம்பியில் சிக்கி காயமடைந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிளை குப்பம் பகுதியில் வயல் வெளி வழியாக மின்சாரம் சென்று கொண்டிருந்த மின் கம்பியில் மயில் ஒன்று சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி மயிலை உயிரோடு காப்பாற்றினர். பின்னர், கால்நடைதுறை மருத்துவர் மூலம் மயிலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பை ஒப்படைக்கப் பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்து மயிலை காப்பாற்றிய நன்னிலம் தீயணைப்பு துறை வீரர்களை அப்பகுதி மக்கள் பாரா ட்டி நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2021

    30-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxyindisee1

    நாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்