குமரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘கோவாக்சின்’ தட்டுப்பாடு நீடிக்கிறது

2021-05-04@ 21:22:04

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் இந்த தடுப்பூசிகள் போடப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது. அதன்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நாகர்கோவில் மாநகராட்சி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் ஆகியவற்றில் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி இருப்பு உள்ளது.

இதர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைவான எண்ணிக்கையில் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் இருப்பு விபரம் வருமாறு:


வெள்ளிச்சந்தை -40
வட்டவிளை- 20
வடிவீஸ்வரம்- 110
வடசேரி- 20
தூத்தூர்- 40
தொல்லவிளை- 40
திருவிதாங்கோடு- 50
தேங்காப்பட்டணம்- 100
ராஜாக்கமங்கலம் -100
பள்ளியாடி- 50
பத்மநாபபுரம்- 200
ஓலவிளை- 50
நட்டாலம்- 50
நாகர்கோவில்- 840
நடுவூர்கரை -20
முட்டம்- 80
முஞ்சிறை- 100
மருங்கூர் -10
குட்டக்குழி- 350
குருந்தன்கோடு- 90
குழித்துறை- 150
கொட்டாரம்- 20
கோதநல்லூர் -120
கொல்லங்கோடு- 100
கிள்ளியூர்- 200
இடைக்கோடு- 300
குளச்சல்- 60
செண்பகராமன்புதூர்- 230
ஆசாரிபள்ளம் -530
ஆரல்வாய்மொழி- 50
அழகப்பபுரம் -10
அகஸ்தீஸ்வரம்-120