டெல்லி: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் பலர் உயிரிழந்து வருவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.