திருவில்லிபுத்தூர்: சாரல் மழை மற்றும் மேகமூட்டத்தின் காரணமாக திருவில்லிபுத்தூர் நகரில் நேற்று மாலை பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன. திருவில்லிபுத்தூர் நகரில் நேற்று காலை முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
வெயில் கொளுத்தி எடுத்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்யத் துவங்கியது. இதனால் ஏற்பட்ட மேகமூட்டத்தால் இருட்டிக் கொண்டு வந்தது. இதனால் திருவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.