கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் 214 இடங்களையும், பாஜக 76 இடங்களையும் கைப்பற்றின. தனிப்பெரும்பான்மை பலத்துடன் மம்தா மீண்டும் 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும் கூட, அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றுவிட்டார். அதனால், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், அடுத்த 6 மாதத்திற்குள் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டிய கட்டாயம் மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க மாலை 7 மணிக்கு ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளேன். வெற்றி கொண்டாட்டங்கள் ஏதும் இன்றி எளிமையாக பதவி ஏற்பு விழா நடைபெறும். பாரதிய ஜனதா கட்சியால் எங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை. நந்திராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. 4 மணி நேரம் சர்வர் செயல்படவில்லை; ஆளுநருக்கு எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு ரஜினி உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தினர். திடீரென நந்திகிராம் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டது. நாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நந்திகிராமில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கூடாது என்று அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பாஜக ஏன் பயப்படுகிறது? இந்தியாவில் இருந்து 65% கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம் சாடினார்.