தூத்துக்குடி : தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக கீதாஜீவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சமக வேட்பாளர் சுந்தர், நாம் தமிழர் கட்சி சார்பில் வேல்ராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்கு பதிவு நடந்தது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் 92,314 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் 42,004 வாக்குகள் பெற்று 2ம் இடத்தையும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் 30,937 வாக்குகள் பெற்று 3ம் இடத்தையும், சமக வேட்பாளர் சுந்தர் 10,534 வாக்குகள் பெற்று 4ம் இடத்தையும், தேமுதிக வேட்பாளர் சந்திரன் 4,040வாக்குகள் பெற்று 5ம் இடத்தையும் பிடித்தனர். 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு சப்கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் கலோன் சான்றிதழ் வழங்கினார்.