ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நேற்று காலை வரையிலான கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 8015 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது. நாளை மறுநாள் காலை 5 மணி முதல் 19ம் தேதி மே காலை 5மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். வார விடுமுறைகளில் முழுஅடைப்பு பின்பற்றப்படும். ஊரடங்கின்போது பொதுமக்கள் காலை 7 மணி முதல் 12 மணி வரை சுமார் 500 மீட்டர் தூரம் வரை நடந்து சென்று காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர மால்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள், சலூன்கள் மூடப்பட்டு இருக்கும்.