சென்னை: தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடே ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக மட்டும் 127 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்கள் மட்டுமே பிடித்து தோல்வி அடைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவை அவரது மகன் மு.க.ஸ்டாலின் நினைவாக்கிவிட்டார். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் உதயசூரியன் உதயமாகிறது.
வெற்றி பெற்றவுடன் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி பதிவேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகள் கோரவில்லை. எம்எல்ஏ தேர்தலில் வென்ற எம்பிக்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கத்தின் முடிவு என்பது அடுத்தக்கட்ட செயல்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.