SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையை தக்கவைத்தது அதிமுக

2021-05-03@ 21:08:17

கோவை: கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் 1,04,632 வாக்குகள் வெற்றிருந்தார். டி.ஆர்.சண்முகசுந்தரம் (திமுக) 1,01,451 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 3,181. சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி 1,17,509 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரிமியர் செல்வம் (கொமதேக) 85,403 வாக்குகள் பெற்றிருந்தார்.

வாக்கு வித்தியாசம் 32,106. கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் 1,34,981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பையா என்ற ஆர்.கிருஷ்ணன் (திமுக) 1,24,557 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 10,424. கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் 80,815 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வடவள்ளி சண்முகசுந்தரம் (திமுக) 76,201 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 4,614.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1,23,538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கார்த்திகேய சிவசேனாபதி (திமுக) 81,829 வாக்குகள் பெற்றிருந்தார்.

வாக்கு வித்தியாசம் 41,709. கோவை தெற்கு தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் 51,380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடிகர் கமலஹாசன் (ம.நீ.ம.) 49,955 வாக்குகளும், மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்) 41,801 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 1,425. சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயராம் 80,437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கார்த்திக் (திமுக) 68,984 வாக்குகளும், மகேந்திரன் (ம.நீ.ம.) 36,553 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்கு வித்தியாசம் 11,453. கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமோதரன் 1,01,537 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குறிச்சி பிரபாகரன் (திமுக) 1,00,442 வாக்குகள் பெற்றிருந்தார்.

வாக்கு வித்தியாசம் 1095. பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் 79,738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டாக்டர் வரதராஜன் (திமுக) 77,650 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 2,088. வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 70,957 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆறுமுகம் (இந்திய கம்யூ.) 58,694 வாக்குகள் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 12,263. கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் கார்த்திக் வெற்றி பெற்றார். இந்த முறை அவரும் தோல்வியை தழுவியதால் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2021

    30-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxyindisee1

    நாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்

  • 28-04-2021

    28-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்