சென்னை: பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள் என்று அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் என்று கமல் கூறியுள்ளார்.