இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்: ரகுமான்
2021-05-03@ 10:19:10
சென்னை: சட்டமன்ந தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த ஏப். 6 -ம் தமிழகம் உள்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கொரோனா வழிமுறையை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக தனி பெருபான்மையாக 126 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் திமுக கூட்டணியில் 158 இடங்களில் வெற்றி பெற்றுறுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். எனவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பலர் தொலைபேசி மூலமாகவும், ட்வீட்டர் வாயிலானகவும் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்ரில் அவரது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.