மம்தா முதல் மத்திய அமைச்சர் வரை மேற்குவங்கத்தில் தோற்ற பிரபலங்கள்

2021-05-03@ 21:46:06

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார். அதேபோல், இதே தொகுதியில் போட்டியிட்ட சிபிஐஎம் வேட்பாளர் மீனாக்ஷி முகர்ஜியும் தோற்றார். டோலிகஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தோற்றார். சுஞ்சுரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகையுமான லாக்கெட் சாட்டர்ஜி தோல்வியுற்றார். ஜமுரியா தொகுதியைச் சேர்ந்த சிபிஐஎம் வேட்பாளரும், இளம் தலைவருமான ஐஷே கோஷ் ேதால்வியுற்றார்.

அதேபோல், தரகேஷ்வர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்பென்தாஸ் குப்தா, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான ருத்ரனில் ேகாஷ் உள்ளிட்ேடார் தோற்றனர். மேலும், திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலர் தோல்வியை சந்தித்தனர். மூத்த தலைவர் முகுல் ராய் போன்ற சிலர் மட்டுமே வெற்றி பெற்றனர்.