சென்னை: கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் இலவச தடுப்பூசி இயக்கத்தை தொடங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள் ளது. அறிக்கையில், ‘அனைத்து மருத்துவமனைகளுக்கும், சுகாதார மையங்களுக்கும் தடையின்றி ஆக்சிஜன் வழங்கலை உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். இதற்காக, பட்ஜெட்டில் தடுப்பூசி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியை பயன்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளனர்.