SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளராகவே செயல்பட்டது இந்திய தேர்தல் ஆணையம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

2021-05-02@ 18:38:41

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் யார் எதிர்பாராத வகையில் 123 தொகுதிகளில் பிடித்து அமோக வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறிய பாஜ.வுக்கு 88 இடங்களே கிடைத்தன. இதன்மூலம், இதன் ஆட்சி கனவு தகர்ந்தது. இந்நிலையில் மம்தா பானர்ஜி செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. கொரோனா காலத்தில் யாரும் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்த வேண்டாம்.

வீட்டிலேயே தங்கியிருங்கள். விரைவில் ஊடகங்கள் வாயிலாக உங்களை சந்திக்கிறேன். மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; இரட்டை இயந்திர அரசாங்கம் என விமர்சித்தது பாஜக- இரட்டை இலக்கத்தில் வென்றுள்ளோம். பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளராகவே செயல்பட்டது இந்திய தேர்தல் ஆணையம். சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது- கீழ்த்தரமான அரசியல் செய்தது பாஜக- தேர்தல் ஆணையத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டோம் எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-05-2021

    02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2021

    30-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxyindisee1

    நாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்

  • 28-04-2021

    28-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • burjjjjjjaaa22

    #StayStrongIndia.. இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபாவில் தேசிய கொடியை ஒளிர செய்த அமீரகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்