கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

2021-05-02@ 00:42:49

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டு இருப்பதால், வாக்கு எண்ணிக்கை முகாம்களில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றி கொண்டாட்டங்கள் இருக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் அலட்சியம் செய்யாமல் அனைத்து கட்சிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தற்பொழுது உள்ள கொரோனா பரவலால் மக்கள் அச்சம் அடைந்து இருக்கும் நேரத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற உற்சாகம், எந்த விதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்க கூடாது.

Tags:

Party GK Vasan Request கட்சி ஜி.கே.வாசன் வேண்டுகோள்