தோல்வியை கண்டு துவண்டுவிட கூடாது கமல் அட்வைஸ்

2021-05-02@ 02:03:01

சென்னை: மநீம தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்து நேற்று கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியால் உங்கள் பாதுகாப்பை மறந்துவிட கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர, பிற கட்சி உறுப்பினர்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை விட உங்கள் பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பது கிடையாது. இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம், புதிய தொடக்கம். இந்த பயணத்தில் மக்களுக்கு நம் மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக்காட்டிலும் முதன்மையானது. வெற்றி எனில் கொண்டாட தேவையில்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளை தொடருங்கள். இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.