அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி: முதல்வர் சோனேவால் பெருமிதம்

2021-05-02@ 12:49:46

டிஸ்பூர் :அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.

மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.இந்த நிலையில், அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 81 இடங்களிலும் காங்கிரஸ் அணி 45 இடத்திலும் முன்னணியில் உள்ளன.இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனேவால் கூறுகையில் ‘‘அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியைமக்கும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் பெருமளவு எங்களுக்கு ஆதரவு தரும் நிலை காணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் போது பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். இதற்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி’’ எனக் கூறினார்.

Tags:

சோனேவால்