டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,689 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 3,92,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,95,57,457 ஆக உயர்ந்தது.
* புதிதாக 3,689 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,15,542 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,07,865 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,59,92,271 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 33,49,644 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.77% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.10% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 17.13% ஆக அதிகரித்துள்ளது.
* இதன் மூலம், நாட்டின் இதுவரை 15,68,16,031 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.