திருச்சி மண்டலத்தில் 5வது இடத்தில் தேமுதிக

2021-05-02@ 15:39:29

திருச்சி: சட்டமன்ற தேர்தலில் திருச்சி மண்டலத்தில் 8 சுற்று தபால் ஓட்டு முடிவுகளில் தேமுதிக 5வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நோட்டா உள்ளது. திருச்சி மண்டலத்தில் 41 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காலை முதல் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் சுற்றில் இருந்தே திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகின்றன.

அடுத்தபடியாக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் 3வது, 4வது இடத்தை பிடித்துள்ளன. அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக பல சுற்று தபால் ஓட்டு எண்ணிக்கையில் 5வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. அடுத்த படியாக நோட்டா உள்ளது.

Tags:

திருச்சி தேமுதிக