சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கிற தொண்டர்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரையிலும் அமமுக முகவர்கள் அந்தந்த மையங்களில் இருந்திட வேண்டும். எந்த சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் போக்கு மாறலாம். அதனால் சிறிய கவனப்பிசகோ, மனச்சோர்வோ, சுணக்கமோ ஏற்பட்டால் கூட அது நமது வெற்றியைச் சேதப்படுத்திவிடும். உங்கள் ஒவ்வொருவரின் உடல் நலனும் முக்கியமானது.