கேரளா: கேரளாவில் தபால் ஓட்டுகளில் தொடக்கம் முதலே இடது முன்னணி முன்னிலை வகித்து வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி இடது முன்னணி 83 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 52 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தது.
தர்மடம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பினராய் விஜயன், புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஹரிப்பாடு தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் ஆகியோர் தபால் ஒட்டுகளில் முன்னிலையில் உள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவரான சுரேந்திரன் மஞ்சேஸ்வரம் மற்றும் கோன்னி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் இவர் தபால் ஓட்டுகளில் பின்தங்கியுள்ளார். காலை 9.30 மணி நிலவரப்படி இடது முன்னணி 83 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 52 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.