ஆவடி: ஆவடி அருகே அயப்பாக்கம்-திருவேற்காடு சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவந்தபோது ஏடிஎம் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால், வங்கியின் கிளை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வங்கி கிளையின் உதவி மேலாளர் மாரிச்செல்வம் (28) நேற்று ஏடிஎம் மையத்துக்கு வந்து பார்வை யிட்டார்.
அப்போது ஏடிஎம் மெஷின் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இதுபற்றி மாரிச்செல்வம் கொடுத்துள்ள புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையடிக்க முயன்ற நபர்களை தேடி வருகின்றனர்.