திருவனந்தபுரம்: பொது இடங்களில் மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசங்கள் அணியுங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் கூறினார்.
சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த விழிப்புணர்வில் பங்குகொள்ள வேண்டும் எனவும் கூறினார். நேற்று ஒரு நாள் மட்டும் கேரளாவில் 37,199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு முககவசங்கள் அணிய வேண்டும் என ஏற்கனவே மும்பை மேயர் கிஷாரி பெட்னேகர் கூறியிருந்தார்.