தமிழகத்துக்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

2021-05-01@ 12:51:20

சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவருக்கு திட்டமிட்டபடி இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் தமிழகத்துக்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு 5.39 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும் 1.94 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.