தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மத்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாகவே இந்திய மக்கள் இன்றைக்கு மரண ஓலங்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: நாடு முடக்கம், ஊரடங்கு, நோய் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் என்ற நடவடிக்கைகளில் மக்கள் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் முடக்கி வருகின்றன.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கொரோனா காலத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம் ஈட்டிக்கொடுக்கும் ஏஜென்டாகவே மோடி அரசு செயல் பட்டுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: உழைப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும், அரசாங்கமுமே சிறந்ததாக திகழ முடியும்.