பீஜிங்: ‘தொற்று நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு சீனா உறுதுணையாக நிற்கும். மேலும், இந்தியாவுக்கு தேவைப்படும் உதவிகளையும், ஆதரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்,’ என்று பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், சீன வெளியுறவு அமைச்சரான வாங், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மனித குலத்துக்கே கொரோனா வைரஸ் பொது எதிரியாக உள்ளது. இந்த சவாலை சந்திக்க சர்வதேச சமூகம் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம். இதில், இந்தியாவுக்கு சீனா ஆதரவாக இருக்கும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். வாங் யி கடிதத்தை இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.