வனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கள் என்ன?....ஐகோர்ட் கேள்வி

2021-05-01@ 16:09:29

சென்னை: வனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கள் என்ன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மரங்களை பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உள்த்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா, டெல்லி, உ.பி, போன்ற மாநிலங்களில் மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.