கரூர்: கரூர் அருகே பிரபல பிரியாணிக் கடையின் குடோனுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் பல கிளைகள் உள்ள பிரியாணிக்கடைக்கு முல்லை நகரில் உள்ள குடோனில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் பிரியாணி தயாரித்ததாக புகார் வந்துள்ளது. அதிகாரிகள் குடோனுக்கு சென்று கெட்டுபோன கோழி இறைச்சியை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளார்.