2 வாரங்களில் தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்டுவதாக மத்திய அரசு அறிவிப்பு: 1.5 தடுப்பூசிகள் கேட்டு கோரிக்கை

2021-05-01@ 13:45:09

டெல்லி: தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. மிகக்குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்புவதாக மத்திய அரசு கூறியது ஏமாற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இன்னும் தமிழக அரசு தொடங்கவில்லை. குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி கிடைப்பதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மே 1-ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக்கூறி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படவில்லை. தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது. இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.