விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

2021-05-01@ 17:50:20

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வத்தராயிப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், அத்திக்கோயில், கோபாலபுரம், கிருஷ்ணன் கோவிலில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டிய நிலையில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.