சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.57.75 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து முகமது(23) என்பவர் கடத்திய வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார். தங்கக்கடத்தில் ஈடுபட்ட நாகபட்டினத்தை சேர்ந்த முகமதுவை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.