லக்னோ : உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் தனது தாத்தாவுக்காக ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஷாங்க் என்ற இளைஞர் கடந்த 26ம் தேதி ஆக்சிஜன் தேவை என பதிவிட்டு நடிகர் சோனு சூட் அவர்களை டேக் செய்து இருந்தார். அந்த பதிவை பலர் ரீட்வீட் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் ஒருவரின் பதிவை பகிர்ந்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணை 3 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஷஷாங்கின் தாத்தா உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்பும் குற்றச் சாட்டின் கீழ் சஷாங்க் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர்.