தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2021-04-30@ 11:39:36

சென்னை: தமிழகத்தில் வருகின்ற மே 2ம் தேதி அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியை நிறுத்தக்கோரிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.