மாமல்லபுரம்: தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், நகரில் மாஸ்க் அணியாதவர்களை முறையாக கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ் மன்றத்தில் அமைக்கப்பட்ட முகாமில் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதில் 35 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 55 பேருக்கு சதுரங்கப்பட்டினம் மருத்துவமனை மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாமல்லபுரம் பேரூராட்சி (பொ) செயல் அலுவலர் வெ.கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, சுகாதாரத் துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர்.