சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆக்சிஜன் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.