ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2021-04-30@ 00:26:21

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வர தொடங்கியிருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் ஆக்கிஜன் தட்டுப்பாடே இல்லை என்று நிலை உருவாக வேண்டும். மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.