சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சம் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.