6வது நாளாக தங்கம் விலை சரிவு

2021-04-29@ 00:39:51

சென்னை: சென்னையில் கடந்த 23ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு 216 குறைந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை 27 குறைந்து 4,438க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரன் 216 ரூபாய் குறைந்து 35,504க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தை போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 குறைந்து 4,840க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 280 குறைந்து 38,720க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மும்பையில் 4,579க்கும், பெங்களூருவில் 4,816க்கும், ஐதராபாத்தில் 4,816க்கும், டெல்லியில் 5,017க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலையும் நேற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 50 பைசா குறைந்து, 73.50க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ 500 குறைந்து 73,500க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:

தங்கம் விலை சரிவு