திருவண்ணாமலை பாஜக நிர்வாகி ஆனந்தன் வீட்டில் குண்டு வீசிய வழக்கில் பாஜக வேட்பாளர் மீது வழக்கு

2021-04-27@ 16:33:33

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பாஜக நிர்வாகி ஆனந்தன் வீட்டில் குண்டு வீசிய வழக்கில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான பாஜக வேட்பாளர் தணிகைவேலுவை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். தேர்தலுக்காக பாஜக வேட்பாளர் தணிகைவேல் ரூ.28 லட்சம் பணம் வாங்கிவிட்டு திருப்பித்தரவில்லை என ஆனந்தன் புகார் கூறியுள்ளார்.