கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

2021-04-27@ 13:00:04

டெல்லி: கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.