ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 124 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்

2021-04-26@ 21:18:05

அகமதாபாத்: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 124 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக மாயங் அகர்வால் 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.