கஞ்சா கடத்திய ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர் கைது

2021-04-24@ 00:53:39

சென்னை,: கென்யா நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலைய கார்கோவிற்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில்  கென்யா நாட்டு தலைநகர் நைரோபியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த 5 பெரிய பார்சல்களை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, அதில் 47 கிலோ விலை உயர்ந்த கஞ்சா இருப்பது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.20 கோடி. அதை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த முகவரியை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 26 வயதுடைய ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரை கைது செய்தனர்.

Tags:

கஞ்சா இன்ஜினியர் கைது