சென்னை: ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அணைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.