கொரோனா சிகிச்சைக்கு ராணுவம் உதவ வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

2021-04-21@ 00:25:08

புதுடெல்லி: ‘கொரோனா சிகிச்சை பணியில் ராணுவம் உதவ வேண்டும்’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா 2வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா சிகிச்சை பணியில் மாநில அரசுகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், ராணுவம், பாதுகாப்புத் துறை செயலர், டி.ஆர்.டி.ஓ. ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், சிகிச்சை அளிப்பதற்கான கைவசம் உள்ள வசதிகளை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கை வசதிகளை உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். ராணுவ கமாண்டர்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யவும் அவர் வலியுறுத்தினார்.