சொல்லிட்டாங்க...

2021-04-21@ 00:37:44

6 மாதமாக மத்திய அரசின் தலைமை, தடுப்பு மருந்து திட்டங்கள் குறித்து கவலைப்படவில்லை. மேற்குவங்க தேர்தல் போர் சதி திட்டத்தில் மட்டுமே சுறுசுறுப்பாக இருந்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஏழை சமூகத்தினருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என உத்தரவாதம் இல்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

கொரோனா முதல் அலையின்போது, அதை சமாளிப்பதற்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. விசிக தலைவர் திருமாவளவன்

பொது முடக்கம் வருங்காலத்தை அழித்து விடும். கொரோனா பரவலை தடுக்க தீர்வாகாது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி