டிஎன்பிஎல் டி20 ஏப்ரல் 30ல் ஏலம்

2021-04-20@ 00:25:43

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடர் கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் நடத்த டிஎன்சிஏ முடிவு செய்துள்ளது. பங்கேற்கும் 8 அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டன. ‘விடுவிக்கப்பட்ட வீரர்கள், விருப்பமுள்ள தமிழக வீரர்கள் தங்கள் பெயர்களை tnpl.tnca.cricket என்ற இணையதளத்தில் உடனடியாகப் பதிவு செய்து, மின்னஞ்சல் செய்ய வேண்டும். வீரர்களுக்கான ஏலம் ஏப்.30ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். போட்டி அட்டவணை, அணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து இறுதி செய்யப்படும்’ என்று டிஎன்சிஏ செயலர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார். சேலம், சேப்பாக்கம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய அணிகள் சில வீரர்களை விடுவித்துள்ளன. அதே நேரத்தில் கோவை, திருச்சி அணிகள் யாரையும் விடுவிக்கவில்லை.

Tags:

DNPL T20 April 30 auction டிஎன்பிஎல் டி20 ஏப்ரல் 30ல் ஏலம்