E-Challan கொடுக்கப்பட்டதா என்பதை தெரிந்துக் கொள்வது எப்படி?

புதுடெல்லி: நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது போக்குவரத்து விதிகளை மீறினால், தப்பிக்க முடியாது. போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், உங்களுக்கு ஆன்லைனில் E-Challan வரும்.  

இ-சல்லன் (E-Challan) என்பது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் பயன்பாடு மற்றும் வலை இடைமுகத்தை உள்ளடக்கிய ஒரு அதிநவீன மென்பொருள் செயலி ஆகும். இது போக்குவரத்தை முறைப்படுத்துவது மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு ஒரு சிறந்த தீர்வை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

இந்த செயலி வாகன் (Vahan) மற்றும் சாரதி (Sarathi) போன்ற செயலிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதோடு, போக்குவரத்து அமலாக்க அமைப்பின் அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் உள்ளடக்கும் பல பயனர் நட்பு அம்சங்களையும் வழங்குகிறது.

Also Read | CSK Captain MS Dhoni 12 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தும் காரணம் என்ன தெரியுமா?

மக்களின் வசதிக்காக, போக்குவரத்து அமைச்சகம் ஆன்லைன் மூலம் சலான் செலுத்தும் வசதியைத் தொடங்கியுள்ளது.இப்போது நீங்கள் வீட்டில் உட்கார்ந்து இ-சலான் வசதியைப் பயன்படுத்தி ஆன்லைனில் அபராதத் தொகையை செலுத்தலாம்.

உங்கள் சலானின் நிலை என்ன என்பதை எப்படி அறிந்து கொள்வது?

முதலில், நீங்கள் echallan.parivahan.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

இப்போது நீங்கள் இணையதளத்தில் இருக்கும் செக் சலான் நிலை விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, சலான் எண், வாகன எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் எண் ஆகியவற்றின் விருப்பங்கள் உங்கள் திரையில் தோன்றும்.

Also Read | ரஃபேல் விமான கொள்முதலால் 21,075 கோடி ரூபாய் இழப்பு என்ற காங்கிரசின் குற்றச்சாட்டு உண்மையா?

இங்கே நீங்கள் வாகன எண்ணுடன் கூடிய விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு நீங்கள் கேப்ட்சா குறியீட்டை (captcha code) நிரப்ப வேண்டும்.

இதற்குப் பிறகு, நீங்கள் ‘Get Detail’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, உங்களுக்கு அபராதம் போடப்பட்டுள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்.

இ-சலான் எவ்வாறு செலுத்துவது?

உங்களுக்கு சலான் விதிக்கப்பட்டால், அதை ஆன்லைனிலும் செலுத்தலாம்.

ஆன்லைனில் அபராதம் செலுத்த ‘Pay Now’ என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

Also Read | Corona Symptoms: மாறிய கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP ஒன்று வரும்.

இதற்குப் பிறகு, உங்கள் மாநிலத்தின் E-Challan கட்டண வலைத்தளம் திறக்கும்.

இதற்குப் பிறகு, நீங்கள் ‘Next’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, கட்டணம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் பக்கம் உங்கள் திரையில் தோன்றும்.

இதற்குப் பிறகு, நீங்கள் ‘தொடரவும்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இணைய வங்கி மூலம் பணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் சல்லன் வரவு வைக்கப்படும்.

ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *