புதுடெல்லி: இரவுநேர ஊரடங்கு நேரத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நோய் பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை இந்த இரவுநேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். டெல்லியில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 5,100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 11,113 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரவுநேர ஊரடங்கு நேரத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் முதலிலில் கோவின் செயலியில் தங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்பின் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரவுநேர ஊரடங்கு நேரத்தில் வந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து காண்பிக்கலாம். ஆனால், முன்பதிவு செய்யாமல் தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் வெளியில் சென்றுவருவதற்கான இ-பாஸ் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும். டிடிஎம்ஏ வழிகாட்டுதல்களின்படி, இரவு ஊரடங்கு உத்தரவின் போது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக வெளியே செல்லும் எவரும் கண்டிப்பாக இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரும்பாலும் இரவுநேர ஊரடங்கு நேரத்தில் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், \”பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் நோய் தொற்று பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து கடந்த ஆண்டு நவம்பரில் பதிவு செய்யப்பட்ட கடைசி ஒற்றை நாள் உயர்வு எண்ணிக்கையை கடந்து சாதனை எண்ணாக மாறும் ஆபத்து உ்ளளது” என்றார். இரவுநேர ஊரடங்கு நேரத்தில் வந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து காண்பிக்கலாம்