தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெடி பொருள் கண்டெடுப்பு

2021-04-08@ 01:42:08

சென்னை: பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் அருகில் உள்ள  தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி எதிரில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.  அதில், ஒரு சிறுவன் பந்தை அடிப்பதற்கு முன்பு  கிரிக்கெட் மட்டையை தரையில் தட்டியுள்ளான். அப்போது, தரையில் ஏதோ இரும்பு பொருளில் கிரிக்கெட் மட்டை தட்டுப்பட்டுள்ளது. அதைதோண்டி பார்த்தபோது ராக்கெட் போல் இருந்துள்ளது.  இதையடுத்து போலீசார் விசாரணையில், அப்போது, அது ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் போட்டு பயன் படுத்தக்கூடிய வெடி பொருள் என தெரிய வந்தது. பின்னர், கும்மிடிபூண்டி பகுதிக்கு எடுத்துச்சென்ற அதை செயலிழக்க செய்தனர்.